பார்வை/பணித்திட்டம்

முதல் ஆட்சிக்குழு சந்திப்பில் அங்கீகரிக்கப்பட்டு, பிறகு இரண்டாம் ஆட்சிக்குழு சந்திப்பில் மாற்றியமைக்கப்பட்ட IRCI –இன் பார்வைகள் மற்றும் செயல்திட்டங்கள் பின்வருமாறு:

1. பார்வை

 (1) ஒப்பந்தத்தின் பிரிவு 4 பத்தி 1 இல் உள்ளபடி ஆசிய-பசிபிக் பிராந்தியத்துக்கான 2003 பேரவையை ஊக்குவித்தல்.

 (2) UNESCO மற்றும் ஜப்பானுக்கிடையேயான ஒப்பந்தத்தின் பிரிவு 4 பத்தி 1 இல் அறிவுறுத்தப்பட்டுள்ள குறிக்கோள்களை, ஒப்பந்தத்தின் பிரிவு 4 பத்தி 2 இல் சுட்டிக்காட்டப்பட்டுள்ள செயல் மூலம் அடைதல்.

 (3) UNESCO –இன் இடைக்கால வியூகம் 37/C4 மற்றும் நான்காண்டுத் திட்டம் மற்றும் நிதிநிலை 37 C/5 ஆகியவற்றை அடைவதற்கு, ஒப்பந்தத்தின் பிரிவு 4 பத்தி 2 இல் சுட்டிக்காட்டியுள்ளபடி பங்களிப்பு வழங்குதல்.

2. பணித்திட்டம்

 (1) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அழியும் நிலையில் உள்ள புதிரான பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகள் மற்றும் முறைமைகள் பற்றிய ஆராய்ச்சியைத் தூண்டுதல் மற்றும் ஒருங்கிணைத்தல், அதற்காக பல்கலைகழகங்கள், ஆய்வு நிறுவனங்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஜப்பான் மற்றும் அப்பகுதியிலுள்ள மற்ற அரசு மற்றும் அரசு-சாரா நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்.

 (2) ஆராய்ச்சிக்காக, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் அத்தகைய நடவடிக்கைகளை 2003 பேரவையின் பிரிவுகள் 11, 12, 13 மற்றும் 14 இல் குறிப்பிட்டுள்ளபடி செயல்முறைப்படுத்துதல், அதே நேரம் வளரும் நாடுகளின் மீது சிறப்பு கவனம் செலுத்துதல்;

 (3) புதிரான பண்பாட்டு மரபுகள் மற்றும் அது தொடர்புடைய நடைமுறைகள் மற்றும் முறைமைகளைப் பாதுகாப்பதில் ஆராய்ச்சியின் பங்களிப்பை ஒரு பயனுள்ள அங்கமாக ஆக்குவதற்காக நிபுணர்கள், சமூகப் பிரதிநிதிகள் மற்றும் ஆசிய-பசிபிக் பகுதியிலிருந்து நிர்வாகிகள் ஆகியோரை உள்ளடக்கி  பயிற்சிப்பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்;

 (4) ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இளம் ஆராய்ச்சியாளர்கள் புதிரான பண்பாட்டு மரபுகளைப் பாதுகாப்பது தொடர்பான ஆய்வு செயல்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்

 (5) மற்ற வகை 2 மையங்கள் மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியம் மற்றும் அதைக் கடந்த பகுதிகளில் புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பதில் துடிப்புடன் செயல்படும் நிறுவனங்களுடன் ஒத்துழைத்தல்; மற்றும்

 (6) புதிரான பண்பாட்டு மரபைப் பாதுகாக்கும் பணியில் துடிப்பாக உள்ள மற்ற அனைத்து விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் அதே வேளையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல்.