பாரிய மீகொங் பிராந்தியத்தில் புலப்படாத கலாசாரப் பாரம்பரியங்களுடன் தொடர்புடைய சட்ட முறைமைகளின் ஆய்வு பற்றிய செயலமர்வு டொயாமா உள்;ராட்சிப் பிரிவிலே இடம்பெற்றது.

பாரிய மீகொங் பிராந்தியத்தில் புலப்படாத கலாசாரப் பாரம்பரியங்களுடன் தொடர்புடைய சட்ட முறைமைகளின் ஆய்வு பற்றிய ஐஆர்சிஐயினது 2ம் செயலமர்வு டொயாமா நகரிலே டொயாமா உள்;ராட்சிப் பிரிவிலே 2015 டிசம்பர் 17 முதல் 19 வரை இடம்பெற்றது. செயலமர்வில் 8 நாடுகளிலிருந்து 23 நிபுணர்கள் கலந்துகொண்டனர்.

பாரிய மீகொங் பிராந்தியத்தில் புலப்படாத கலாசாரப் பாரம்பரியங்களுடன் தொடர்புடைய சட்ட முறைமைகளின் ஆய்வானது 2014 முதல் 2016 வரையான நிதியாண்டுகளில் அமுல்படுத்தப்படவுள்ள ஐஆர்சிஐயினது தொடர்ந்து இடம்பெறும் ஆய்வுக் கருத்திட்டமாகும்.  வௌ;வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழமைவுகளைக் கொண்டுள்ள மீகொங் பிராந்தியத்தலுள்ள பல நாடுகளில் ஐசிஎச் பாதுகாப்பிற்கான சட்டச் சட்டகம் உருவாக்கப்படவுள்ளது. களக் கணிப்பீடுகள் மூலமும் இந்த நாடுகளிலுள்ள அரசாங்க உத்தியோகத்தர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்கள் மூலமும் தகவல்களைச் சேகரித்து பகுப்பாய்வு செய்யும் இந்தக் கருத்திட்டம் உள்;ர் நிபுணர்களுடன் சேர்ந்து இந்த நாடுகளுக்கு நடைமுறைச் சாத்தியம் வாய்ந்ததும் நன்மை பயக்க்ககூடியதுமான செயற்திறன்மிக்க சட்டச் சட்டகங்களை உருவாக்குவதற்குப் பங்களிப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குயூசு பல்கலைக்கழகம் மற்றும் ஏனைய நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் கடந்த ஐPன் மாதத்தில் வினாக் கொத்தினை உருவாக்கியுள்ளனர். இவை பின்னர் மீகொங் பிராந்தியத்திலுள்ள நாடுகளுக்கு விநியோகிக்கப்பட்டன. மிக விரிவான தகவல்களைப் பெறுவதற்காக இரண்டு நிபுணர்களை மியன்மாருக்கும் தாய்லாந்திற்கும் லாவோசிற்கும் ஐஆர்சிஐ  கடந்த நவம்பரில் அனுப்பிவைத்தது. டொயாமா செயலமர்வு ஒரு வாய்ப்பாக அமைந்தது. இங்கே களக் கணிப்பீட்டினை மேற்கொண்ட நிபுணர்களும் இக்கருத்திட்டத்தினால் இலக்கு வைக்கப்பட்ட மீகொங் பிராந்தியத்திலுள்ள நாடுகளைச் சேர்ந்த அரசாங்க உத்தியோகத்தர்களும் பல்கலைக்கழக ஆய்;வாளர்களும் இற்றைப்படுத்தப்பட்ட பெறுபேறுகளைப் பகிரவும் கலந்துரையாடவும் ஒன்றுசேர்ந்தனர். கருத்திட்டத்தின் இறுதி இலக்கு தேசிய மட்டத்திலும் உள்;ர் மட்டத்திலும் சட்ட முறைமைகளை உருவாக்குவதற்குப் பயன்மிக்க கருவித் தொகுதியினை வழங்குவதேயாகும். இந்தச் செயலமர்வு பாரிய வெற்றியாக அமைந்திருந்தது. இந்த இலக்கு நோக்கிய அடிப்படைக் கலந்துரையாடலினை இயலுமாக்கியுள்ளது.

பாரம்பரியக் கைவினைத் தயாரிப்புக்களுக்குப் புத்துயிரளிக்கும் சிறந்த நடைமுறைகளைக் கொண்டிருப்பதற்காக டொயாமா உள்;ராட்சிப் பிரிவின் ஒத்துழைப்பிற்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம். டோயாமா மற்றும் டகவோகா நகரங்களில் ஐசிஎச்சினைப் பாதுகாப்பதற்கான உள்;ர் முறைமைகள் பற்றிய செயலமர்வு விரிவுரைகளின் பகுதியாக இவற்றினை உள்ளடக்குவது சாத்தியமாகியுள்ளது. டகவோகா நகரத்தில் உள்;ர் கைவினைஞர்களை நேர்காண்பதற்காக கைவினை அரங்கங்களுக்கு விஐயம் செய்வதற்கான வாய்ப்பினையும் இச்செயலமர்வு வழங்கியது. இச்செயலமர்வில் இலங்கையிலிருந்தும் பங்குபற்றுனர்கள் கலந்துகொண்டனர்: தேசிய கைவினைக் கவுன்சிலைச் சேர்ந்த நிபுணர்களும் மோதலினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாண மாவட்டத்;தினைச் சேர்ந்த இரண்டு பெண் கைவினைஞர்களும் இதில் பங்குபற்றினர். மோதலுக்குப் பின்னரான நாடுகளில் (இலங்கை) ஆபத்திலுள்ள பாரம்பரியக் கைவினைகள் பற்றிய ஆய்வு எனும் தலைப்பிலான ஐஆர்சிஐயினது மற்றுமோர் கருத்திட்டத்திலும் இவர்கள் கலந்துகொண்டனர். இலங்கையில் கைவினைத் தொழிலினை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இந்த இலங்கைப் பங்குபற்றுனர்களுடன் நடைமுறைத்திட்டங்கள் பற்றியும் சந்தைப்படுத்தல் உபாயமார்க்கங்கள் பற்றியும் ஐஆர்சிஐ கலந்துரையாடியது.

 மேலதிக தகவல்களுக்கு மிசாகோ ஓனுகியினைத் (ஐஆர்சிஐ) தொடர்புகொள்க

டொயாமா உள்;ராட்சிக் கல்விச் சபையினைச் சேர்ந்த யோகோசகய், வர்த்தகம்,கைத்தொழில் மற்றும்; தொழில்திணைக்களத்தினைச் சேர்ந்த இசிரோ மியசகி

Yoko Sakai from Toyama Prefectural Board of Education, and Ichiro Miyazaki from commerce, Industry and Labor Department

பாரம்பரியக் கைவினை உற்பத்திக்குப் புத்துயிரளிப்பதுபற்றி கட்சுஐp நோசகு உரையாடுகின்றார்.Katsuji Nousaku talks about the revitalization of traditional craft production

Yoshinori and Takeshi Musashigawa lecture the techniques of lacquer ware in Takaoka

டகவோகாவிலே மெருகுப் பூச்சு உத்திகள் பற்றி யொசினோரியும் டகேசி முசசிகாவாவும் விரிவுரை நடத்துகின்றனர்

கைவினை அரங்கங்களுக்கு கைவினைஞர்கள் மேற்கொண்ட விஐயம் பற்றி நிபுணர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கின்றனர்.